×

போடி பகுதியில் நெல் சாகுபடியில் களையெடுப்பு தீவிரம்

போடி :  போடியைச் சுற்றியுள்ள குரங்கணி, முந்தல், மேலப்பரவு, கூலிங்காற்று பரவு, பாண்டி முனி கருப்பசாமி கோயில் புலம், சன்னாசிபுரம் செட், அணைக்கரைப்பட்டி, துரைராஜபுரம், தோப்புபட்டி, பொட்டல்களம், மீனாட்சிபுரம், விசுவாசபுரம், பத்ரகாளிபுரம், காமராஜபுரம், கோடாங்கிபட்டி ஆகிய பகுதிகளில் கொட்டகுடி ஆறு பாசனம் மூலம் சுமார் ஆயிரம் ஏக்கரில் ஒருபோக நெல் சாகுபடி விவசாயம் நடந்து வருகிறது. மேலும் புதுக்குளம், பங்காருசாமி குளம், சங்கரப்பநாயக்கன் கண்மாய், மீனாட்சியம்மன் கண்மாய், செட்டிகுளம் ஆகிய குளங்களில் கொட்டகுடி ஆற்று நீரை தேக்கி நெல் சாகுபடிக்கு பயன்படுத்தி வருகின்றனர். மேலும், நிலத்தடி நீர் உயர்வால் கிணற்று பாசனம் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னை, சோளம், காய்கறிகள் என பலதரப்பட்ட விவசாயம் நடந்து வருகிறது. இதனிடையே நவம்பர் முதல்வர் நெல் நடவுப் பணி நிறைந்து 45 நாட்கள் வளர்ந்துள்ள நெற்பயிரில் களை எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பயிர் பிப்ரவரி மாதத்தில் அறுவடைக்கு வரும் என எதிர்ப்பார்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்….

The post போடி பகுதியில் நெல் சாகுபடியில் களையெடுப்பு தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Mundal ,Koolingadu ,Pandi Muni Karupasamy Temple Field ,Sannasipuram ,Dinakaran ,
× RELATED போடி அருகே குரங்கணி பிரிவில் சாலை...