×
Saravana Stores

ரூ.58.38 கோடி மதிப்பீட்டில் கடப்பாக்கம் ஏரி புனரமைப்பு பணி: முதல்வர் தொடங்கி வைத்தார்

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 16வது வார்டில் கடப்பாக்கம் ஏரி உள்ளது. 149 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி அப்பகுதி மக்களின் நிலத்தடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. எனவே, இந்த ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மாநகராட்சி சார்பில், ஆசிய வங்கியின் உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி மானிய நிதி ரூ.58.33 கோடியில், ஏரியை தூர்வாரி சீரமைக்க திட்டமிடப்பட்டது. இந்த பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். ெதாடர்ந்து, கடப்பாக்கம் ஏரியில் நடந்த நிகழ்ச்சியில், மண்டல உதவி ஆணையர் கோவிந்தராசு, செயற் பொறியாளர் தேவேந்திரன், மாதவரம் வடக்கு பகுதி திமுக செயலாளர் புழல் நாராயணன், கவுன்சிலர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் ஏரியில் பூத்தூவி பணிகளை தொடங்கினர். இதில், ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, கொள்ளளவை அதிகரித்தல், மரம் நடுதல், மதகு சீரமைத்தல், பல்லுயிர் பெருக்கம் போன்ற வசதிகளுடன் பொது மக்களுக்கு நடைபாதையும் அமைக்கப்பட உள்ளது.

The post ரூ.58.38 கோடி மதிப்பீட்டில் கடப்பாக்கம் ஏரி புனரமைப்பு பணி: முதல்வர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Thiruvottiyur ,Kadappakkam Lake ,16th Ward, ,Manali ,Mandal ,Chennai Corporation ,Kadapakkam lake ,
× RELATED திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில்...