- சுதந்திர தினம் அணிவகுப்பு
- வௌசி ஸ்டேடியம்
- பாலையங்கோட் நெல்லா
- என்.சி.சி
- சுதந்திர தினம்
- நெல்லா பாலியங்கோட் வாஸி
- சுதந்திர தின அணிவகுப்பு
- பாலையங்கோட் வௌசி ஸ்டேடியம்
நெல்லை: நெல்லை பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் மாவட்ட, மாநகர போலீசார் உட்பட தீயணைப்பு வீரர்கள், என்சிசி மாணவர்கள் அடங்கிய போலீசார் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையில் இன்று ஈடுபட்டனர். நாட்டின் 78வது சுதந்திர தின விழா வரும் 15ம்தேதி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை வஉசி மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன், தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தி சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளை கௌரவிக்கிறார்.
சுதந்திரதினத்தை முன்னிட்டு போலீசார், தீயணைப்பு வீரர்கள், என்சிசி மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்துவார்கள். இதன் காரணமாக கடந்த 8ம் தேதி முதல் நெல்லை மாவட்ட மற்றும் மாநகர போலீசார் இணைந்து வஉசி மைதானத்தில் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நெல்லை மாவட்ட தீயணைப்பு வீரர்கள், என்சிசி மாணவர்களும் இந்த அணி வகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். சுதந்திர தின அணிவகுப்பில் 210 போலீசார், தீயணைப்பு படையினர், என்சிசி மாண, மாணவிகள் அணிவகுப்பில் ஈடுபட உள்ளனர். இவர்கள் இன்று காலை வஉசி மைதானத்தில் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
The post பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை appeared first on Dinakaran.