×

சுதந்திர தின விழாவிற்கு முன்பான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்வு: நிகழ்வு முடியும் வரை ராஜாஜி சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை புனித ஜார்ஜ்கோட்டை தலைமை செயலகம் சுதந்திர தின விழாவிற்கு முன்பான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்வு நடைபெற்றதால் நிகழ்வு முடியும் வரை ராஜாஜி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும் சுதந்திர தின விழாவை ஒட்டி ஆகஸ்ட் 5,9,13 ஆகிய தேதிகளில் ஒத்திகை நிகழ்வு நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கு முன்பாக அதற்கான ஒத்திகை நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவிற்கான ஒத்திகை 3 நாட்கள் நடைபெற உள்ளது.

சுதந்திர தின விழாவை ஒட்டி ஆகஸ்ட் 5,9,13 ஆகிய தேதிகளில் ஒத்திகை நிகழ்வு நடைபெறுகிறது. ஒத்திகையின்போது சென்னையில் காமராஜர் சாலை, ராஜாஜி சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு ஒத்திகை நிகழ்வு நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று ஒத்திகை துவங்கியது. இதே போன்று இனி வரும் 2 நாட்களிலும் நடைபெற உள்ளது.

கடைசி நாளில் முழுமையாக சுதந்திர தினத்தன்று எவ்வாறு அணிவகுப்பு நடைபெறுமோ அவ்வாறு ஒத்திகை நடைபெறும். இந்நிலையில் முதல் நாளான இன்று மழையும் பொருட்படுத்தாமல் காவலர்கள் ஒத்திகையில் ஈடுபட்டு வந்தனர்.

The post சுதந்திர தின விழாவிற்கு முன்பான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்வு: நிகழ்வு முடியும் வரை ராஜாஜி சாலையில் போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Pre-Independence Day Parade Rehearsal ,Rajaji Road ,CHENNAI ,St. Georgekot Head Secretariat ,Independence Day ,Pre-Independence Day Parade ,
× RELATED 78-வது சுதந்திர தின விழாவையொட்டி மூவர்ண...