திருவாரூர், ஆக. 12: திருவாரூர் மாவட்டத்தில் எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவின் படி மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை, ஆன்லைன் லாட்டரி விற்பனை மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது, மணல் கடத்தல், வழிபறி உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழ க்குகளில் தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி அருகே இடும்பாவனத்தில் கடந்த மாதம் 14ம் தேதி கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த மகேஷ் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் கஞ்சா விற்பனை தொடர்பாக இவர் மீது ஏற்கனவே 6 வழக்குகள் விசாரணையில் இருந்து வரும் நிலையில் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் இதற்கான ஆணையை கலெக்டர் சாரு வழங்கினார். இதனையடுத்து மகேஷ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரையில் சட்டவிரோத செயல்களில் ஈடுப்பட்ட 21 பேர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதுபோன்று பொது மக்களின் இயல்பு வாழ்கைக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கதுடன் நடந்து கொள்வது மற்றும் சட்டவிரோதமாக சாராயம் மற்றும் மதுவிற்பனை உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுப்படுபவர்கள் தொடர்ந்து கைது செய்ய ப்பட்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடு க்கப்படும் என்று எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600-ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ ஆயிரமும் உதவித்தொகை யாக வழங்கப்படுகிறது. இவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த ஜுன் மாதம் 30ம் தேதியுடன் ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். இவர்களுக்கு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை.
The post திருத்துறைப்பூண்டி அருகே கஞ்சா விற்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது appeared first on Dinakaran.