- ஆம்ஸ்ட்ராங்
- புழல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பகுஜன் சமாஜ் கட்சி
- நிலை
- ஜனாதிபதி
- புழல் அம்பேத்கர்
- மாநில செயலாளர்
- புழல் இரா பெரியார் அன்பன்
- தின மலர்
புழல், ஆக. 12: தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவேந்தல் மற்றும் பொதுக்கூட்டம் புழல் அம்பேத்கர் சிலை அருகில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி மாநிலச் செயலாளர் புழல் இரா.பெரியார் அன்பன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் வெள்ளானூர் வெங்கட், ஒருங்கிணைப்பாளர் ஆலன் மோசஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் மாநில தலைவர் வழக்கறிஞர் ஆனந்தன், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜோஸ்வா, அம்பேத்கார், விச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், வடகரை ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ஜானகிராமன் மற்றும் மாவட்ட, மாநில, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர். முன்னதாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் திருவுருவ படத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். முடிவில் புழல் சிவா நன்றி உரையாற்றினர்.
The post ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு நினைவேந்தல் appeared first on Dinakaran.