×

போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.38 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

சென்னை: போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை செயலாளர் பனிந்திர ரெட்டி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும், புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரை உயிரிழந்த தொழிலாளர்களுக்கும் ஓய்வுகால பணப்பலன்கள் வழங்கப்பட வேண்டியுள்ளது.

இதில் 50 சதவீத வருங்கால வைப்புத் தொகை உட்பட பணப்பலனின் ஒரு பகுதியை வழங்க ரூ.38.73 கோடி தேவைப்படுவதாக போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டது. மேலும் அந்த கடித்ததில் மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.9.6 கோடி, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.1.1 கோடி, விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி போக்குவரத்துக் கழகங்களுக்கு முறையே ரூ.5.8 கோடி, ரூ.3.6 கோடி, ரூ.4.3 கோடி, ரூ.8 கோடி, ரூ.3.2 கோடி, ரூ.2.9 கோடி வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த கோரிக்கையை பரிசீலித்த அரசு, போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கான பணப்பலன் வழங்க ரூ.38 கோடியே 73 லட்சத்து 65 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையை எடுக்க போக்குவரத்து துறை செயலாளருக்கு அதிகாரம் வழங்கப்படுவதாகவும், செலவுகள் குறித்து சட்டப்பேரவைக்கு தகவல் தெரிக்க வேண்டும். மேலும் அனைத்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்களும் ஒரு வாரத்திற்குள் நிதி வழங்குதல் தொடர்பான தகவல்களை அனுப்ப வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

The post போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.38 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Transport Corporation ,Chennai ,Tamil Nadu government ,Secretary of ,Transport ,Banindra Reddy ,
× RELATED மாநகர் போக்குவரத்துக் கழகத்தில்...