×

திமோர் லெஸ்டேவில் ஜனாதிபதி முர்முவுக்கு உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

டிலி: ஜனாதிபதி திரவுபதி முர்மு மூன்று நாள் அரசு முறை பயணமான பிஜி, நியூசிலாந்து மற்றும் திமோர் -லெஸ்டே நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். நேற்று அவர் திமோர்-லெஸ்டேவிற்கு சென்றார். அதிபர் ராமோஸ் -ஹோர்டோ வரவேற்றார். இதனையடுத்து ஜனாதிபதி முர்முக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இது குறித்து ஜனாதிபதி அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவில்,‘‘ஜனாதிபதி திரவுபதி முர்முவிற்கு பொது சேவை, கல்வி, சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரம் உள்ளிட்டவற்றில் அவர் ஆற்றிய அரிய பணிகளுக்காக திமோர் லெஸ்டே நாட்டின் உயரிய விருதான கிராண்ட் காலர் ஆப்தி ஆர்டர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post திமோர் லெஸ்டேவில் ஜனாதிபதி முர்முவுக்கு உயரிய விருது வழங்கி கவுரவிப்பு appeared first on Dinakaran.

Tags : President Murmu ,Timor Leste ,Delhi ,President ,Draupadi Murmu ,Fiji ,New Zealand ,Timor-Leste ,President Ramos-Horto ,Murmu ,
× RELATED ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு வழங்கிய ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி