×

பல ரூபங்களில் துர்க்கை வழிபாடு

கிழக்கு முகமாக அமைந்துள்ள துர்க்கையின் கோயில், புத்தியையும் ஜயத்தையும் கொடுக்கும். மேற்கு முகமாக அமைந்த கோயில் முக்தியை அருளக் கூடியது. சிவன் பிரதானமாக உள்ள கோயிலில் துர்க்கையின் சந்நதி தென் மேற்கு முகமாக இருக்க வேண்டும் என்று தீப்தி ஆகமமும் வீராகமமும் கூறுகின்றன. காரணாகமம் தெற்கு முகமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. வடக்கு முகமாக இருக்க வேண்டும் என்று ரௌரவ ஆகமத்தில் கூறியுள்ளது. விஷ்ணு கோயிலில் உள்ள துர்க்கை சந்நதி கிழக்கு வாயிலில் வடக்கு முகமாக இருக்க வேண்டும் என்று மரீசி சம்ஹிதையில் சொல்லியுள்ளது. ப்ருஹு சம்ஹிதை, துர்க்கையை வைஷ்ணவி மாயா, யோக நித்ரா, ப்ருக்ருதி, த்ரயிமயீ (மூன்று வேதங்களின் வடிவம்) என்று சொல்கிறது. கர்நாடகா கொல்லூரில் மூகாம்பிகையாக, லட்சுமி சரஸ்வதி, காளியின் கலப்புறவாக இருக்கிறாள். 3 அடி உயர வெண்கல வடிவில் லலிதாசனத்தில் அமர்ந்துள்ளாள். சிலர் துர்க்கைக்கு பதில் சூலம், திரிசூலத்தையே வைத்து வழிபடுவார்கள். கர்நாடகா, புத்தூர் அருகில் உள்ள பலப்பா என்ற ஊரிலுள்ள திருசூலி கோயிலில் இவ்வாறு செய்கிறார்கள். கர்நாடகா, கேரளாவில் அநேக கோயில்களில் லிங்க வடிவில் துர்க்கையை வழிபடுகிறார்கள்.

சங்கடம் நீக்கும் விநாயகனும்… சந்தோஷம் தரும் சந்தோஷிமாதாவும்…

“நலமே தரும் நிறை கல்வியும் நன்செல்வமும் தந்து
பலமே தரும் விநாயகர் பெரும் பல சங்கடம் போக்கிக்
குலமே நிறை கவின் சிந்தனை குறையா மனம் ஈவாள்
தலமாய் மடிப்பாக்க இணையிலா அருள் தேவி சந்தோஷி’’

வரும் 23-08-2024 அன்று சென்னை புழுதிவாக்கத்தில் (முதலாவது தெரு, அன்னை தெரெசா நகர்) உள்ள ஸ்ரீவித்தக விநாயகர் ஸ்ரீசந்தோஷி மாதா ஆலய மஹா கும்பாபிஷேகம் நடைபெறயிருக்கிறது. காலை 8.00 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் கன்யா லக்னத்தில் கும்பாபிஷேகம் நிகழயிருக்கிறது. இதையொட்டி முன்னதாகவே, 21.8.2024 முதல் 23.8.2024 வரை யாகசாலை பூஜைகள் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் தொடங்கி, மகா பூர்ணாஹுதி வரை மகா கும்பாபிஷேக விழா, சுவாமி திருவீதி புறப்பாடுகளுடன் சிறப்பாக நடைபெற உள்ளது. ஆன்மிக பெருமக்கள், இதில் கலந்து கொண்டு இறைவனின் அருளைப் பெற வேண்டுகிறோம்.

 

The post பல ரூபங்களில் துர்க்கை வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Turkey ,Deepti Agamam ,Veerakama ,Sannadi ,
× RELATED ஒலிம்பிக் துளிகள்…