- கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- நாமக்கல்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- வில்லியனேயா வெளியேறு போராட்ட நினைவு நாள்
- மத்திய பிஜேபி ஊராட்சி
- கம்யூனிஸ்ட்
- தின மலர்
நாமக்கல் ஆக.10: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு போராட்ட நினைவு தினத்தையொட்டி, மத்திய பாஜ அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய கிரிமினல் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி, மாநில அளவிலான சட்ட நகல் எரிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நாமக்கல்லில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அன்புமணி தலைமை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் குழந்தான், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மணிவேல், கிருஷ்ணசாமி, ஜெயராமன், கணேஷ்குமார், மணிமாறன், செங்கோட்டுவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சிவகுமார், நகர செயலாளர் சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கையை விளக்கி கோஷங்களை எழுப்பினர். சட்ட நகலை எரிக்க போலீசார் அனுமதி வழங்காததால், அனைவரும் கலைந்து சென்றனர்.
The post கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.