×

ஒட்டன்சத்திரத்தில் சாலை பணி ஆய்வு

ஒட்டன்சத்திரம், ஆக. 10: ஒட்டன்சத்திரம் உட்கோட்டத்திற்குட்பட்ட அம்பிளிக்கை, குத்திலிப்பை பகுதிகளில் நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் குறித்து கோட்ட பொறியாளர் குமணன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தர். அப்போது உரிய அளவீட்டில் சாலைகள் அமைக்கப்படுகிறதா எனவும், சாலையின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் சாலை பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். இந்த ஆய்வின் போது உதவி கோட்ட பொறியாளர் விஜயகுமார், உதவியாளர் ஆண்டவர் மற்றும் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.

The post ஒட்டன்சத்திரத்தில் சாலை பணி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Ottanchatra ,Otanchatram ,Ambilikai ,Kuthlippai ,Kumanan ,
× RELATED ஒட்டன்சத்திரம் அருகே ஓடைப்பகுதியில் 16...