பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா இந்திய நேரப்படி நாளை நள்ளிரவு தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்ற நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் நிறைவு விழாவில் அணிவகுக்க உள்ளனர். அதில் இந்திய குழுவினருக்கு துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் தேசியக் கொடி ஏந்தி தலைமை வகிப்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒலிம்பிக் வெண்கலத்துடன் ஓய்வு பெற்றுள்ள ஹாக்கி அணி கோல் கீப்பர் பி.ஜே.ஜேஷுக்கும் அந்த கவுரவம் வழங்கப்படுகிறது.
அணிவகுப்பில் இருவரும் இணைந்து தலைமையேற்பார்கள் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. இந்திய ஹாக்கி அணிக்காக 20 ஆண்டுகள் விளையாடி உள்ள பி.ஆர்.ஸ்ரீஜேஷ் பாரிஸ் ஒலிம்பிக்குடன் சேர்த்து மொத்தம் 336 சர்வதேச போட்டியில் களமிறங்கியுள்ளார். 2 ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கங்கள், 2 ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம், 2 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்றுள்ளார்.
The post நிறைவு விழா அணிவகுப்புக்கு மனு பாக்கர், ஸ்ரீஜேஷ் தலைமை appeared first on Dinakaran.