- காந்தர்வகோட்டை
- அதிகலம் சவாடி குளம்
- கந்தர்வகோடா
- அதிகளம் காவடி குளம்
- தஞ்சாய் ரோட்
- கந்தர்வகோட்டை ஊராட்சி
- புதுக்கோட்டை மாவட்டம்
- தின மலர்
கந்தர்வகோட்டை,ஆக.9: கந்தர்வகோட்ட அருகே அடைக்கலம் சாவடி குளத்திற்கு நீர் வரத்து பாதையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சியில் தஞ்சை சாலையில் உள்ள அடைக்கலம் காவடி குளம் தற்சமயம் தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. நீர் வரும் வடக்கு வாரியை சீர் செய்யாததால் நீர் வரும் பாதை தடை ஏற்பட்டுள்ளது. எனவே ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மக்கள் பெரிதும் பயன்படுத்தும் இந்த குளத்திற்கு நீர் வரும் வாரியை போர்கால அடிப்படையில் உடனடியாக சீர் செய்து தர வேண்டும் என கோரிக்கையை ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் பொதுமக்கள் விடுத்தனர்.
தற்சமயம் பெய்த மழை புதுக்கோட்டை மாவட்டத்திலேயே கந்தர்வகோட்டையில்தான் அதிக அளவு பெய்துள்ளது என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது இந்த நிலையில் அடைக்கலம் சாவடி குளத்துக்கு நீர் வரும் வரத்து பாதை சீர் செய்யாததால் நீர் நிரம்ப வில்லை இப்பகுதியில் ஆவணி மாதம் மழை பெய்யும் என்பதை கவனத்தில் கொண்டு நீர் வரும் பாதையை சீர் செய்து குளம் நிரம்ப தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் ஊராட்சி ஒன்றிய ஆனையரிடம் கோரிக்கை வைக்கின்றனர்.
The post அடைக்கலம் சாவடி குளத்திற்கு நீர் வரத்து பாதையை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.