×

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் சிறை அனுபவிக்கும் நளினிக்கு பரோல் கேட்டு தாய் மனு: பரிசீலனையில் உள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை: நளினிக்கு 1 மாதம் பரோல் வழங்க கோரி அவரது தாயார் அளித்த மனு பரிசீலனையில் இருப்பதாக ஐகோர்ட்டில் அரசு தெரிவித்துள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினியை 1 மாதம் பரோலில் வெளியிட கோரி அவருடைய தாயார் பத்மா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2018ம் ஆண்டு  நளினி உள்ளிட்ட 11 பேரை  விடுவிக்கக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அது நிலுவையில் உள்ளது.இந்நிலையில், தன்னை கவனித்துக்கொள்ள ஏதுவாக மகள் நளினிக்கு ஒருமாதம் பரோல் வழங்க கேட்டு கடந்த மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தமிழக உள்துறை செயலாளருக்கு அனுப்பிய மனு மீது எந்த முடிவும் எடுக்காததால் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, பத்மாவின் மனு அரசின் பரிசீலனையில் உள்ளதால், அதுகுறித்து விளக்கம் பெற்று தெரிவிக்க ஏதுவாக வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 23ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்….

The post ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் சிறை அனுபவிக்கும் நளினிக்கு பரோல் கேட்டு தாய் மனு: பரிசீலனையில் உள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Nalini ,Rajiv ,Chennai ,Igourde ,Government of Tamil Nadu ,Ikort ,
× RELATED 15 மாதங்களில் 11 கல்லீரல் மாற்று அறுவை...