புதுடெல்லி: போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்தது உறுதியானால் பணியில் இருந்து நீக்குவதற்கு ஏற்கனவே உள்ள விதிகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன என்று ஒன்றிய அமைச்சர் ஜிதேந்தர் சிங் மாநிலங்களவையில் தெரிவித்தார். மாநிலங்களவையில் எழுத்து மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று பதிலளிக்கையில்,‘‘போலி சாதி சான்றிதழ்கள் அடிப்படையில் அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் வேலை வாய்ப்புகளை பெறுவது பற்றி அவ்வப்போது புகார்கள் வருகின்றன.
அவை சம்மந்தப்பட்ட துறைகளுக்கு உரிய நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படும். அரசு வேலையில் சேர ஒருவர் தவறான தகவல்களை அளித்ததாகவோ,போலி சான்றிதழ்களை சமர்ப்பித்தது கண்டறியப்பட்டாலோ அவர் பணியில் தொடரக்கூடாது என ஏற்கனவே உள்ள விதிகளின்படி பணியில் இருந்து நீக்குவது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தால் அவரை பணியில் இருந்து நீக்குவதற்கு அதிகாரி நடவடிக்கை எடுக்கலாம்’’ என்றார்.
The post போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்தால் டிஸ்மிஸ்: ஒன்றிய அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.