×

செல்போன் பேசிய கல்லூரி மாணவர் ஷாக்கடித்து சாவு

தொட்டியம்: திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த நாச்சாப்புத்தூர் கருங்காட்டை சேர்ந்தவர் முத்துக்குமார்(23). தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள மின்கம்பத்தில் சாய்ந்து செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து முத்துக்குமார் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்ததில் வரும் வழியிலேயே முத்துக்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post செல்போன் பேசிய கல்லூரி மாணவர் ஷாக்கடித்து சாவு appeared first on Dinakaran.

Tags : Thaniyam ,Muthukumar ,Nachaputtur Karungat ,Trichy district ,
× RELATED தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது