×

கார் தொழிற்சாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த மகேந்திராசிட்டி பகுதியில் தனியார் கார் தொழிற்சாலை உள்ளது. இதில், 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கார் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கார் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் தொழிலாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 6ம் தேதி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்த, தொழிற்சாலை நிர்வாகம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மேலும், சில புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.

இதனை கண்டித்து, நேற்று கார் தொழிற்சாலை முன்பாக 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தொழிற்சாலை நிர்வாகத்தினர் தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, நாங்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பணி செய்வதாக எழுதிக் கொடுத்தால் மீண்டும் பணியில் சேரலாம், என்று தொழிலாளர்களிடம் தெரிவித்தனர். அதனை ஏற்க மறுத்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று தொழிற்சாலை முன்பாக தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post கார் தொழிற்சாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Mahendracity ,Dinakaran ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்