×
Saravana Stores

மாற்று மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட யூடியூபர் கைது

சென்னை, ஆக. 8: மாற்று மதத்தை இழிவுபடுத்தும் வகையில் வீடியோ பதிவிட்ட யூடியூபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சென்னை காவல் கிழக்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 30ம் தேதி பிலிப் நெல்சன் லியோ (43) என்பவர் புகார் ஒன்று அளித்தார். அதில், பிரியாணிமேன் யூடியூபர் அபிஷேக் ரபி என்பவர் கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தும் விதத்தில் நடித்து அதை தனது இன்ஸ்டாகிராம் ஐடி மூலம் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். மாற்று மதத்தினரிடையே பகை, வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக குற்றம் செய்ய தூண்டும் நோக்கத்துடன் இந்த பதிவை அவர் வெளியிட்டுள்ளார். இது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே யூடியூபர் அபிஷேக் ரபி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் கிழக்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தனிப்படை மூலம் விசாரிக்கப்பட்டது. விசாரணையின் முடிவில், குற்றச்சாட்டுக்குள்ளான சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த அபிஷேக் ரபி (29), நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

The post மாற்று மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட யூடியூபர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Philip Nelson Leo ,Chennai Police East Zone Cyber Crime Police Station ,
× RELATED சென்னை போரூர் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை