×
Saravana Stores

மக்களை தேடி மருத்துவ திட்டமுகாம் 4ம் ஆண்டு துவக்கவிழா: கலெக்டர் பங்கேற்பு

 

அரியலூர், ஆக. 7: அரியலூர் மாவ ட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட 4-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, துவக்கி வைத்துப் பார்வையிட்டார். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திம் மூலம் மருத்துவப்பணியாளர்கள் மக்களின் இல்லங்களுக்கே சென்று ரத்தகொதிப்பு, சர்க்கரை அளவு பரிசோதனை, இயன்முறை மருத்துவ சிகிச்சை, நீரழிவுக்கான மருத்துவசேவைகள், அத்தியாவசிய மருத்துவ சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இத்திட்டத்தின் 4ம் ஆண்டு தொடக்க விழா சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார். முகாமில் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவ பணியாளர்களிடம் கேட்டறிந்தார். முன்னதாக அரியலூர் மாவட்டத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் வட்டார மருத்துவ அலுவலர், இயன்முறை மருத்துவர்கள், செவிலியர்கள், நோய் தடுப்பு பராமரிப்பு பணியாளர் செவிலியர்கள், பெண் சுகாதார பணியாளர்கள் மற்றும் இடைநில சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 34 மருத்துவ பணியாளர்களுக்கு சிறப்பு பாராட்டுச்சான்றிதழ்களை , வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அஜிதா, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post மக்களை தேடி மருத்துவ திட்டமுகாம் 4ம் ஆண்டு துவக்கவிழா: கலெக்டர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : 4th Annual Inauguration of People Seeking Medical Project ,Ariyalur ,District ,Collectorate ,Seeking Medicine Project ,Collector ,Rathnaswamy ,People Seeking Medical ,4th Annual Inaugural Ceremony ,Dinakaran ,
× RELATED அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீர்களுக்கு ஓய்வூதிய குறைதீர் முகாம்