- பெரியம்மை
- கால்நடை பராமரிப்பு துறை
- Velayuthampalayam
- செமங்கி
- கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை
- வலயக்
- கூட்டு இயக்குனர்
- டாக்டர்
- சாந்தி
- கால்நடை பராமரிப்பு துறை
- தின மலர்
வேலாயுதம்பாளையம், ஆக.7: கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சேமங்கி பகுதியில் பெரியம்மை நோய் தடுப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் சாந்தி தலைமை வைத்து முகாமை துவக்கி வைத்தார்.
கால்நடை பராமரிப்பு துறை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் லல்லிஅருள் குமாரி முன்னிலை வகித்தார். முகாமில் நொய்யல் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் டாக்டர் உஷா தலைமையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் மாலதி ஆகியோர் கொண்ட குழுவினர் முகாமில் கலந்து கொண்ட மாடுகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசி போட்டனர். இதில் சேமங்கி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது மாடுகளை அழைத்து வந்து பெரியம்மை நோய் தடுப்பூசி போட்டு பயன்பெற்றனர்.
The post கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பெரியம்மை நோய் தடுப்பு ஊசி முகாம் appeared first on Dinakaran.