- ஆடி அமாவாசி
- ஏரல் தலைவர் கோவில்
- ஏரல்
- ஆதி அமாவாசை திருவிழா
- ஏரல் தலைவர் அருணாச்சல் சுவாமி கோயில்
- சேர்ம விநாயகர்
- சுவாமி
- ஆதி
- அமாவாசி
- ஏரல் சேர்மன் கோவில்
ஏரல், ஆக. 7: ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா, கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. தினமும் காலையில் சேர்ம விநாயகர் உலா வருதல், மாலையில் சுவாமி பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி நகர்வீதி வலம் வரும் நிகழ்ச்சி நடந்து வந்தது. 10ம் திருநாளான ஆடி அமாவாசை விழா, கடந்த 4ம் தேதி நடந்தது. நேற்று முன்தினம் நடந்த 11ம் திருவிழாவில் காலையில் வெள்ளை சாத்தி தரிசனம், பச்சைசாத்தி அபிஷேகம், மதியம் 3ம் காலம் பச்சைசாத்தி சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி நகர்வீதி வலம் வருதல், இரவு கோயில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்த காட்சி, திருக்கற்பூர தீப தரிசனம் நடந்தது. 12ம் திருநாளான நிறைவு நாள் விழா நேற்று நடந்தது. இதில் காலை தீர்த்தவாரி பொருநை நதியில் சகல நோய் தீரும் திருத்துறையில் சுவாமி நீராடல், மதியம் அன்னதானம், மாலை ஆலிலைச் சயன அலங்காரம், தொடர்ந்து ஊஞ்சல் சேவை, இரவு சுவாமி திருவருள் புரியும் மங்கள தரிசனம் நடந்தது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் செய்திருந்தார்.
The post ஆடி அமாவாசை நிறைவு விழா ஏரல் சேர்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி appeared first on Dinakaran.