×

உட்கட்சித் தேர்தல் விவகாரம்: கடலூர் அதிமுகவில் பயங்கர கோஷ்டி மோதல்: 4 பேர் படுகாயம், வாகனங்கள் உடைப்பு

கடலூர்:  கடலூர் மாவட்ட அதிமுக வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என பிரிக்கப்பட்ட நிலையில் வடக்கு மாவட்ட அதிமுக தேர்தல் டிசம்பர் 22 மற்றும் 23ம் தேதிகளில் நடத்துவதாக கூறப்படுகிறது.  முன்னாள் அமைச்சரும், அதிமுக வடக்கு மாவட்ட செயலாளருமான சம்பத் உட்கட்சித் தேர்தல் தொடர்பாக மனு வழங்குவது உள்ளிட்ட ஆயத்த பணிகளை கடலூர் பாதிரிக்குப்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று மேற்கொண்டார். அப்போது கடலூர் நகர துணை செயலாளர் கந்தன் தரப்பினர், அனைத்து வார்டுகளுக்கும் புதிய விண்ணப்பம் வழங்க வேண்டும். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்ய வேண்டும். பழைய ஆட்களுக்கு வழங்கக்கூடாது என கோரிக்கை வைத்தனர். இதற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற நிர்வாகி குமார் மற்றும் ஆறுமுகம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் வலுத்துள்ளது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் சம்பத் சமாதானம் செய்துவிட்டு, புறப்பட்டு சென்றார்.  அதன்பின் இரு தரப்பினரும் மீண்டும் அதிமுக கட்சி அலுவலக வளாகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பு உருவானது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இருதரப்பு ஆதரவாளர்கள் பயங்கரமாக மோதிக்கொண்டனர். கடலூர்- திருவந்திபுரம் சாலையிலும் நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பயத்தில் சிதறி ஓடினர். போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இருதரப்பு கோஷ்டி மோதலில் நகர துணைச் செயலாளர் கந்தன் மற்றும் சேவல்குமார் தரப்பைச் சேர்ந்த ஆறுமுகம், ராதாகிருஷ்ணன், பாலாஜி உள்ளிட்டவர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதையடுத்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கட்சி அலுவலக வளாகம் மற்றும் கடலூரில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். …

The post உட்கட்சித் தேர்தல் விவகாரம்: கடலூர் அதிமுகவில் பயங்கர கோஷ்டி மோதல்: 4 பேர் படுகாயம், வாகனங்கள் உடைப்பு appeared first on Dinakaran.

Tags : Udkshit ,Cuddalore ,Adhimukha ,Cuddalore District ,North ,East ,North District ,Prekimakkam ,
× RELATED கடலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே...