×

ஆர்.எம்.கே. கல்லூரியில் விளையாட்டு போட்டிகள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்

கும்மிடிப்பூண்டி: கவரப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே. கல்லூரி வளாகத்தில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை ஆர்.எம்.கே. கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஸ்ரீமதி மஞ்சுளா முனிரத்தினம் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2ம் தேதி தொடங்கியது. இதில், ஆம்.எம்.கே. கல்வி குழுமத்தின் செயலாளர் ஸ்ரீ யளமஞ்சி பிரதீப் தலைமை தாங்கினார். மேலும், இதில் ஆர்எம்கே பள்ளி முதல்வர் ஸ்ரீமதி சப்னா சங்க்லா முன்னிலை வகித்தார்.

இதனை தொடர்ந்து திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, மாதவரம், பூந்தமல்லி, ஆவடி, திருத்தணி, அம்பத்தூர், தாம்பரம், மதுரவாயில், போரூர் பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் வாலிபால், நீச்சல் போட்டி, பேஸ்கெட் பால், புட்பால், டென்னிஸ் ஆகிய பல்வேறு போட்டியில் பங்கேற்றனர். இதற்கு முன்னதாக, கடந்த வாரம் கல்லூரி வளாகத்தில் வாலிபால் விளையாட்டு போட்டியை ஆர்.எம்.கே கல்வி குழுமத்தின் செயலாளர் ஸ்ரீ யளமஞ்சி பிரதீப் தொடங்கி வைத்தார். பின்னர் ஆர்.எம்.கே. வளாகத்தில் பல்வேறு போட்டிகள் நடைபெற்ற நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நேற்றுமுன்தினம் பரிசுகளும், கேடயமும் வழங்கப்பட்டன.

The post ஆர்.எம்.கே. கல்லூரியில் விளையாட்டு போட்டிகள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,R.M.K. ,Kavarappettai ,Kavarappet ,Shrimati Manjula Munirathanam Memorial Day ,
× RELATED கீழ்முதலம்பேடு ஊராட்சி அலுவலகத்தின்...