நெல்லை: நாங்குநேரி அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.60 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கார், 8 செல்போன்கள், அரிவாள், கத்தி மற்றும் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான ஒரிஜினல் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.
நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு நேற்று மாலை 7 மணி அளவில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது மூன்றடைப்பு போலீசார், நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். நெல்லையிலிருந்து சென்ற காரை அந்த செக்போஸ்டில் மறித்து போலீசார் சோதனையிட்டனர். இதில் காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ளநோட்டுகள் கட்டுக் கட்டாக இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். உடனே அந்தக் காரை ஒரங்கட்டி அதில் இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், விருதுநகரைச் சேர்ந்த சீமைச்சாமி, தென்காசியை சேர்ந்த விஷ்ணுசங்கர் மற்றும் தங்கராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த மூன்றடைப்பு போலீசார், அவர்களிடமிருந்து கள்ள நோட்டை விநியோகிக்க பயன்படுத்திய கார், 8 செல்போன்கள், அரிவாள், கத்தி மற்றும் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 20 மதிப்பிலான அசல் ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
The post காரில் கொண்டு சென்ற ரூ.60 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்: நாங்குநேரி அருகே பரபரப்பு appeared first on Dinakaran.