×

மாயனூர் காவிரி கதவணையில் நீரில் மூழ்கிய வாலிபரின் உடல் 2 நாட்களுக்கு பிறகு மீட்பு

*சோகத்தில் கிராம மக்கள்

கிருஷ்ணராயபுரம் : மாயனூர் காவிரி கதவணையில் நீரில் மூழ்கிய வாலிபரின் உடல் 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நாகனூர், பெருமாள் கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சண்முகம் (21). இவர், தனது நண்பர்களுடன் ஆடி 18 ஐ முன்னிட்டு மாயனூர் காவிரி கதவணை பகுதியின் தென்கரை மேட்டு வாய்க்கால் பிரிவு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறி குளிக்க சென்றுள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து அதிகளவில் தண்ணீர் வருவதால் கதவணை கடல் போல் காட்சியளிக்கும் நிலையில் தண்ணீரின் ஆழம் தெரியாமல் நீரில் மூழ்கினார்.

தகவல் அறிந்த மாயனூர் போலீசார் மற்றும் கரூர் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் வடிவேல் தலைமையில் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் நேற்றுமுன்தினம் மாலை 3 மணி அளவில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பின்னர் 7 மணி அளவில் தேடுதல் பணியை தற்காலிகமாக நிறுத்தினர். இந்நிலையில் நேற்று காலை 7 மணி முதல் மீண்டும் தீயணைப்பு நிலைய வீரர்கள் நீரில் மூழ்கிய வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டர். மாலை 5.30 மணி அளவில் தென்கரை மேட்டு வாய்க்காலில் சண்முகம் சடலமாக மீட்கப்பட்டார்.

தேடுதல் பணியை கலெக்டர் தங்கவேல், டிஆர்ஓ. கண்ணன், சப் கலெக்டர் இளங்கோவன், குளித்தலை ஆர்டிஓ. தனலட்சுமி, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன், மாயனூர் இன்ஸ்பெக்டர் முருகேசன், தீயணைப்புத்துறை மாவட்ட உதவி அலுவலர் கோமதி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். நீரில் மூழ்கிய வாலிபரை இரண்டு நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டதால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.

The post மாயனூர் காவிரி கதவணையில் நீரில் மூழ்கிய வாலிபரின் உடல் 2 நாட்களுக்கு பிறகு மீட்பு appeared first on Dinakaran.

Tags : Mayanur Cauvery gorge ,Krishnarayapuram ,Mayanur Cauvery river ,Naganur, Perumal Kauntanpatti ,Tokaimalai, Karur district ,Mayanur ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு தினம்