- மணல்
- பேராவூரணி
- பட்டுக்கோட்டை
- டிஎஸ்பி
- பாஸ்கர்
- பேராவூரணி
- இன்ஸ்பெக்டர்
- பேஷுபதி
- துணை ஆய்வாளர்
- பூஜஹெண்டி
- செங்கமங்கலம் காடு
- அம்புலி
- செங்கமங்கலம்
- தின மலர்
பேராவூரணி, ஆக. 3: பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் காட்டாற்று பகுதியில் பட்டுக்கோட்டை டிஎஸ்பி பாஸ்கர் மேற்பார்வையில், பேராவூரணி இன்ஸ்பெக்டர் பசுபதி, சப் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது செங்கமங்கலம் பகுதியில் உள்ள அம்புலி ஆற்றில் இருந்து 8 மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிய கும்பலை சுற்றி வளைத்தனர்.
இதில் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் (55), சுந்தர்ராஜ் (60) சுப்பிரமணியன் (44), கலைச்செல்வன் (43) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 8 மாட்டு வண்டிகளை காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பேராவூரணி 4 பேரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மேலும் 8 ஜோடி மாடுகளையும் கும்பகோணம் கோசாலைக்கு அனுப்பிவைத்தனர்.
The post காட்டாற்றில் மணல் திருட்டு: 4 பேர் கைது appeared first on Dinakaran.