×
Saravana Stores

நீட் தேர்வுக்கு முன் முதுகலை மருத்துவ இடங்கள் ரூ.13 கோடிக்கு விற்கப்பட்டன: ஜேபி நட்டா சொல்கிறார்

புதுடெல்லி: மாநிலங்களவையில் திமுக எம்பி முகமது அப்துல்லா கொண்டு வந்த நீட் மீதான தனிநபர் மசோதா மீதான விவாதத்தின் போது ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டா குறுக்கிட்டு கூறியதாவது: நீட் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு மருத்துவக் கல்வி திறந்த வணிகமாக மாறிவிட்டது. முதுகலை மருத்துவ இடங்கள் ஒவ்வொன்றும் ரூ.8 கோடி முதல் ரூ.13 கோடி வரை விற்கப்பட்டன. முதல் முறையாக நீட் கொண்டு வரப்படுவதற்கு முன்பே மருத்துவக் கல்வியில் ஊழல் நிறைந்திருந்தது. மருத்துவக் கல்வி வணிகத்தின் குகையாகிவிட்டது.

நான் சுகாதார அமைச்சராக இருந்தபோது நீட் தேர்வை கொண்டு வருவதற்கு முன்பு வரை, ​​ஒரு முதுகலை மருத்துவ இடங்கள் ரூ. 8 கோடிக்கு விற்கப்பட்டது. கதிரியக்கவியல் போன்ற துறையை தேர்வு செய்ய வேண்டும் என்றால் அது ரூ.13 கோடிக்கு விற்கப்பட்டன. நீட் தேர்வு வருவதற்கு முன்பு, மருத்துவத் தேர்வுக்காக மாணவர்கள் நாடு முழுவதும் செல்ல வேண்டியிருந்தது. செலவழித்த பணம் மற்றும் நேரம் தவிர, மருத்துவக் கல்வி அமைப்பில் பெரும் ஊழலையும் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இவ்வாறு கூறினார்.

 

The post நீட் தேர்வுக்கு முன் முதுகலை மருத்துவ இடங்கள் ரூ.13 கோடிக்கு விற்கப்பட்டன: ஜேபி நட்டா சொல்கிறார் appeared first on Dinakaran.

Tags : NEET ,JP Nata ,New Delhi ,Union Health Minister ,J. P Nata ,Neat ,Dinakaran ,
× RELATED 100% தேர்ச்சி, 100% வேலை வாய்ப்பு போலி...