×

கோவையில் பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் உயிரிழப்பு..!!

கோவை: கோவை காளப்பநாயக்கன் பகுதியில் விஷப் பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் உயிரிழந்தார். 15 ஆண்டுகளாக பாம்பு பிடி தொழில் செய்து வந்த இடையர்பாளையத்தைச் சேர்ந்த முரளி (44) பாம்பு கடித்தது. பிரிண்டிங் நிறுவனத்தில் 3 அடி நீள பாம்பை லாவகமாக மீட்ட முரளியை எதிர்பாராதவிதமாக பாம்பு திடீரென கடித்தது. பாம்பு கடித்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த முரளி மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

The post கோவையில் பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : KOWAI ,KALAPPANAYAKAN ,Murali ,Interstate ,
× RELATED 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு...