×

அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயில் 2ம் நாள் தேர் திருவிழா

அறந்தாங்கி, ஆக. 2: அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயில் இரண்டாம் நாள் தேர் திருவிழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். 2ம் நாள் தேர்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குளிர்பானங்கள் வழங்கினர். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிக்கு காவல் தெய்வமாக உள்ள வீரமாகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆடி திருவிழாவின் போது 2 நாள் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இவ்வாண்டு ஆடி திருவிழாவிற்காக கடந்த 12ம் தேதி பூச் சொரிதல் விழா நடைபெற்றது. இதையடுத்து 23ம் தேதி கோயிலில் காப்புகட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் மண்டகடிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு அபிஷேகம் செய்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

நேற்றுமுன்தினம் 9ம் நாள் திருவிழாவை முன்னிட்டு முதலாம் நாள் தேர் திருவிழா நடைபெற்றது. இந்நிலையில் நேற்று இரண்டாம் நாள் தேர் திருவிழா நடைபெற்றது.தேர்திருவிழாவில் பக்தர்கள் அறந்தாங்கி பெரிய பள்ளிவாசல் வழியாக வடம்பிடித்து இழுத்து வந்து தேரை நிலைநிறுத்தினர். இந்த தேர்திருவிழாவின் போது மத நல்லிணக்கத்தோடு இஸ்லாமியர்கள் பள்ளிவாசல் அருகே தேர் இழுத்து வந்த பக்தர்களுக்கு குளிர்பானம், தண்ணீர் வழங்கினர். தொடர்ந்து வரும் 20ம் தேதி வரையில் ஆடிபெருந்திருவிழா நடைபெறும்.

The post அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயில் 2ம் நாள் தேர் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Aranthangi Veeramakaliamman Temple 2nd Day Chariot Festival ,Arandangi ,Aranthangi Veeramakaliamman Temple ,Chariot Festival ,Pudukottai district ,Aranthangi ,
× RELATED மணமேல்குடி அருகே கணவனை பிரிந்து தனியாக வசித்த பெண் மர்மசாவு