- அடியான்குடி சிசிஎம் பள்ளி
- வெக்கான்விளை
- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்
- நெலைல மாவட்ட அறிவியல் மையம்
- மாவட்ட பசுமைப்படை இயக்கம்
- இடையன்குடி சி.சி.எம்
- தின மலர்
திசையன்விளை, ஆக.2: தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், நெல்ைல மாவட்ட அறிவியல் மையம் மற்றும் மாவட்ட பசுமைப்படை இயக்கம் சார்பில் ஒருமுறை பயன்படுத்தும் ‘பிளாஸ்டிக் தவிர்ப்பும், மஞ்சப்பை பயன்பாடும்’ என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான போட்டிநடந்தது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் இடையன்குடி சி.சி.எம் மேல் நிலைப்பள்ளி மாணவி சாருமதி பேச்சுப்போட்டியில் இரண்டாமிடமும், ஓவியப் போட்டியில் காவ்யாதர்ஷினி இரண்டாமிடமும், வினாடி வினா போட்டியில் ஷில்மியா மற்றும் ஓவியா ஆகியோர் மூன்றாமிடமும் பெற்றனர். இவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் சாமுவேல் ஜெபக்குமாரை பள்ளி தாளாளர் ஜேகர், தலைமை ஆசிரியர் வெஸ்லி சாலமோன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
The post இடையன்குடி சி.சி.எம். பள்ளி மாணவிகள் சாதனை appeared first on Dinakaran.