தாராபுரம், ஆக.2: தாராபுரத்தை அடுத்த கொல்லப்பட்டியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் கடந்த 2001ம் ஆண்டு தாராபுரம் உப்புத்துறை பாளையம் வண்டி வாய்க்கால் என்ற இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார், அவர் கொலை செய்யப்பட்டாரா ?அல்லது வாகன விபத்தில் இறந்தாரா ?அல்லது இயற்கை மரணமா ?என அன்றைய போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்த நிலையில் கொல்லப்பட்டியை சேர்ந்த அந்த தொழிலாளி கொலை செய்யப்பட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக் கூறி தாராபுரம் அமராவதி ஆற்று பாலத்தில் திரண்டு 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் .
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசாரை கைகளால் தாக்கியும் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தனர். கிராம மக்கள் தாக்கியதில் சில போலீசார் காயமடைந்த நிலையில் சட்டம் ஒழுங்கை காப்பதற்காக சென்ற போலீசாரை தாக்கியதாக கூறி 20 நபர்கள் மீது கடந்த 2001ம் ஆண்டு தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்கிய நபர்களில் 19 பேரை கைது செய்தனர்.
ஒருவர் தலைமறைவாக இருந்து வந்தார் இந்நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த கொல்லப்பட்டியைச் சேர்ந்த தனபாலன் கேரளாவில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதன் அடிப்படையில் சப்.இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் கேரள மாநிலத்துக்கு விரைந்து சென்று அங்கு தோட்டத் தொழிலாளியாக தலைமறைவாக இருந்த கொல்லப்பட்டி தனபாலனை கைது செய்தனர்.
The post போலீசாரை தாக்கிய வழக்கில் 25 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது appeared first on Dinakaran.