ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக.2: ஸ்ரீவில்லிபுத்தூரில் தேரோடும் ரதவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில், ஆடிப்பூர தேரோட்டம் வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது. இங்குள்ள தேரோடும் நான்கு ரதவீதிகளும் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் வருகிறது. இந்நிலையில், தேரோட்டத்தையொட்டி நகரில் நான்கு ரதவீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனை மாநில நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, அறநிலையத்துறை, மின்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தேரோடும் சாலையில் இடையூறாக இருந்த மரக்கிளைகள் அகற்றப்பட்டு, சாலையின் இருபுறங்களிலும் தேர்ச்சக்கரங்கள் செல்ல தடம் வரையப்பட்டுள்ளது. மேலும், சாலையில் ஆங்காங்கே இருந்த பள்ளங்கள் சீரமைக்கப்பட்டு, சாலைகளை தூய்மைப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேரோட்டத்திற்காக ரத வீதிகளில் தொடர்ச்சியாக பல்வேறு பணிகளும் நடைபெற உள்ளன என தெரிவித்தார்.
The post ஸ்ரீவில்லிபுத்தூரில் தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம் appeared first on Dinakaran.