×
Saravana Stores

விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூட்டம்

 

விருதுநகர், ஆக.2: விருதுநகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கட்சி அலுவலகத்தில் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி, திண்டுக்கல் மாவட்ட மானாவாரி விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் மாசிலாமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மானாவாரி விவசாயிகள் பருவம் தவறிய மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு தனி முயற்சி எடுத்து மானாவாரி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். நீர்நிலைகளை நம்பியே விவசாயம் செய்ய வேண்டி இருப்பதால் கண்மாய், குளங்களை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி நீரை சேமிக்க வரும் நிதியாண்டில் அரசு நிதி ஒதுக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஊக்க மானியம் வழங்க வேண்டும்.உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

அரசே கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் செய்தவற்றை பாதுகாக்க கிடங்கு வசதிகள் செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.9ல் மானாவாரி விவசாயம் நடைபெறும் மாவட்ட தலைநகரங்களின் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்’’ என்றார். பேட்டியின் போது முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, முன்னாள் எம்பி லிங்கம், நிர்வாகிகள் செந்தில்குமார், பாலமுருகன், சங்கரபாண்டி உடனிருந்தனர்.

The post விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Sivagangai ,Ramanathapuram ,Madurai ,Thoothukudi ,Dindigul ,Communist Party of India ,Tamil Nadu Farmers Union ,State ,Masilamani ,Union ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு பருவமழை...