- மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
- சட்டமன்ற உறுப்பினர்
- திருவள்ளூர்
- பூண்டி பஞ்சாயத்து
- யூனியன் கமிட்டி
- துணை ஜனாதிபதி
- மகாலட்சுமி மோதிலால்
- மாவட்ட ஆணையர்
- எஸ்.வாசுதேவன்
- ஜனாதிபதி
- பி.வெங்கட்ரமணா
- துணைக் குடியரசு
- உடன் முதல்வர் திட்ட முகாம்
- தின மலர்
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. ஒன்றிய குழு துணை தலைவர் மகாலட்சுமி மோதிலால் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் செ.வாசுதேவன், ஒன்றிய குழு பெருந்தலைவர் பி.வெங்கட்ரமணா, துணைப் பெருந்தலைவர் மகாலட்சுமி மோதிலால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வ.ஊ.) பசுபதி, மேலாளர் (நிர்வாகம்) சேகர், ஒன்றிய கவுன்சிலர் வி.விஜி, ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்து, பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூண்டி, நெய்வேலி, ஒதப்பை, மோவூர், ஆற்றம்பாக்கம், சோமதேவன் பட்டு, அரியத்தூர், நம்பாக்கம், வெள்ளாத்துக் கோட்டை ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் ஒரு சில பயனாளிகளுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.
இதில் உதவி திட்ட அலுவலர் மணிவாசகம், ஒன்றிய திமுக செயலாளர்கள் தா.கிறிஸ்டி (எ) அன்பரசு, ச.மகாலிங்கம், ஜான், பொதுக்குழு உறுப்பினர் ப.சிட்டிபாபு, வி.எஸ்.நேதாஜி, மாவட்ட கவுன்சிலர் சுதாகர் பட்டரை பாஸ்கர், ஜி.டில்லிபாபு, பூண்டி அருண், பி.சரவணன், வேளாண்மை உதவி இயக்குனர் இளையராஜா, துணை வட்டாட்சியர் ஆதிலட்சுமி, வருவாய் ஆய்வாளர் விஜயலட்சுமி, வேளாண்மை அலுவலர் ராஜேஷ், உதவி வேளாண்மை அலுவலர்கள் தினேஷ்குமார், திவ்யா, தவப்புதல்வன், அருள்மொழி, சுனில் குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் அ.சேகர், அன்பரசன், சக்திவேல், பரத், ஹேமாவதி, கிராம உதவியாளர்கள் மகேஷ்பாபு, சந்திரசேகர், ரஜினி, விஜயராஜ், தனலட்சுமி, திமுக நிர்வாகிகள் வி.எஸ்.சதீஷ், எல்.மோகன், எம்.கௌதம், கிருபாகரன், பி.பாலசுப்பிரமணி, ஆர்.புவனேஷ், குமரேசன், அன்பு, கோபி, குணசேகரன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
The post மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: எம்எல்ஏ பங்கேற்று மனுக்களை பெற்றார் appeared first on Dinakaran.