×

போதை ஏறிப்போச்சு… புத்தி மாறிப்போச்சு… சாலை நடுவே பைக்கில் அமர்ந்து போதை ஆசாமி அடாவடி

காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள எடையார் சாலையில் நேற்று மதுபோதையில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தான் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை சாலையில் நடுவே கவிழ்த்துப் போட்டு அதன் மீது அமர்ந்து கொண்டு செல்போன் பேசியவாறு இருந்துள்ளார். அப்பகுதியாக செல்லும் பொதுமக்கள் தட்டி கேட்டபோது ஆபாசமாக திட்டி ஒதுங்கி செல்லுங்கள் என கூறி, தொடர்ந்து போன் பேசியவாறு அமர்ந்துள்ளார்.இதனால் அந்த சாலையில் டிராக்டர், கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்லமுடியாத நிலை  ஏற்பட்டது. நீண்டநேர போராட்டத்திற்கு பிறகு அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் போதை ஆசாமியையும் அவரது வாகனத்தையும் அப்புறப்படுத்தினர். நடப்பவைகள் அனைத்தையும் இளைஞர் ஒருவர் வீடியோ பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது….

The post போதை ஏறிப்போச்சு… புத்தி மாறிப்போச்சு… சாலை நடுவே பைக்கில் அமர்ந்து போதை ஆசாமி அடாவடி appeared first on Dinakaran.

Tags : Kattumannarkoil ,Kattumannarkoil, Cuddalore district ,
× RELATED கலைஞர் கைவினைத் திட்டத்தில் 406 கைவினைக்கலைஞர்களுக்கு ரூ.1.66 கோடி கடன்