×

மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம் கம்பீரமாக காட்சியளிக்கும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

*முத்துப்பேட்டை மக்கள் அரசுக்கு நன்றி

*சொன்னதை செய்து காட்டிய திராவிட மாடல் அரசு

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டையில் உள்ள அரசு துறை கட்டிடங்கள் பெரும்பாலும் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது. இதில் ஏற்கனவே பேரூராட்சி அலுவலகம் கட்டிடம், சார்பதிவாளர் கட்டிடம், அரசு மருத்துவமனை கட்டிடம், உழவர் சந்தை கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு துறை கட்டிடங்கள் அரசு பள்ளிகள் கட்டிடங்கள் அனைத்தும் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது.

அதன் பின்னர் கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் பல கோடி மதிப்பிலான அரசு பள்ளி கட்டிடங்கள், பாலங்கள் துணை சுகாதார நிலைய கட்டிடங்கள் நூலக கட்டிடங்கள் கட்டித் திறக்கப்பட்டு தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது.

அதன் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு பகுதிக்கும் என்னென்ன தேவை என்பதை கடந்த ஐந்தாண்டு காலத்தில் திட்டமிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுத்துறை கட்டிடங்கள், மக்கள் பயன்பெறும் திட்டங்களின் கட்டிடங்கள் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது அதேபோல் முத்துப்பேட்டையிலும் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக முத்துப்பேட்டை ஒன்றியத்தில் 29 ஊராட்சிகள் உள்ளன.

அதை சார்ந்த 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன காவிரி ஆற்றின் கடைமடை பகுதியாக இங்கு நெல் சாகுபடி மற்றும் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். இப்படி ஏழை எளிய விவசாயிகள் மீனவர்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதிக்கு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள முத்துப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகில் வட்டார வளர்ச்சி அலுவலகம் இருந்தது.

இதனை 1958ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த பெரும்தலைவர் காமராஜர் கட்டி திறந்து வைத்த இப்பகுதி மக்களின் பெருமைக்குரிய ஊராட்சி ஒன்றிய அலுவலகமாகும். சுமார் 64ஆண்டை கடந்த இந்த கட்டிடம் பொலிவு இழந்து சேதமாகியதால் அந்த கட்டிடத்தை உடன் இடித்துவிட்டு கட்ட வேண்டும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இதனை கடந்தமுறை 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு கண்டுக்கொள்ளத்தால் கட்டிடம் படுமோசமாக காணப்பட்டது இதனால் இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்டகாலம் கோரிக்கை வைத்து வந்தனர் ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்காக மாறியது.

பின்னர் இந்த முறை திமுக ஆட்சிக்கு வந்ததும் இதனை ஆய்வு செய்த அரசு ஆட்சிக்கு வந்த இரண்டாவது ஆண்டு சட்டமன்ற கூட்ட தொடரில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இந்த பழமையான கட்டிடத்தை இடித்துவிட்டு பல்வேறு வசதிகளுடன் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்ட சுமார் 4கோடி நிதி அறிவித்தார்.

அதன்படி உடனடியாக பணிகள் துவங்கி புதிய கட்டிடம் கட்ட வெளியூர் தொழிலாளர்கள் இங்கேயே தங்கி பணியில் முழுவீச்சில் இரவு பகலாக ஈடுபட்டு பணிகள் முடிந்து தயாராகி சென்ற ஆண்டு கம்பீரமாக காட்சி அளிக்கும் இந்த புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டத்தை சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதில் இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தனித்தனியாக கீழ் தளம் மேல் தளம் என பிரித்து ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேற்கொள்ளும் பணிகளுக்கு தனிதனி அறைகள், கணினி அறைகள், மீட்டிங் ஹால், மினி மீட்டிங் ஹால், என தனிதனி பகுதிகள் மக்கள் ஈசியாக வந்து செல்ல விசாலமான பரப்பளவு அதேபோல் பணியாற்றும் அலுவலர்களுக்கு குளியல் அரசை கழிப்பறை உள்ளிட்ட வசதிகள், மக்கள் வந்து செல்ல வசதிகள் ஏராளமான வாகனங்கள் நிறுத்த முன்பகுதி வராண்டா என சகலவசதிகளுடன் முத்துப்பேட்டைக்கே பெருமை சேர்கின்ற வகையில் முத்துப்பேட்டையில் ஒரு கம்பீரமாக காட்சி அளிக்கிறது இந்த புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

இந்தநிலையில் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றி இந்த புதிய கட்டிடம் கட்டிய தமிழக அரசுக்கு இப்பகுதி மக்கள் நன்றி கூறி மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது இப்பகுதிக்கு திராவிட மடல் அரசு செய்த சாதனை என்பதை இப்பகுதி மக்கள் மனதில் நீங்காத இடமாக உள்ளது.

Tags : Panchayat Union Office ,Muthuppettai ,Muthupettai ,DMK ,Town Panchayat Office ,Registrar's Office ,Government Hospital… ,
× RELATED கலைஞர் கைவினைத் திட்டத்தில் 406 கைவினைக்கலைஞர்களுக்கு ரூ.1.66 கோடி கடன்