- சாட்டை கொறடா
- டுகாச்சி
- திருவிடைமருதூர்
- திருவிடைமருதூர்
- முதல் அமைச்சர்
- தமிழக முதல்வர்
- போக்குவரத்து அமைச்சர்
- துகாச்சி
- திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி
- தஞ்சாவூர் மாவட்டம்
திருவிடைமருதூர், ஆக. 1: திருவிடைமருதூர் அருகே துக்காச்சியில் புதிய வழித்தட பேருந்தை அரசு தலைமை கொறடா கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படியும், போக்குவரத்து துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படியும், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, துக்காச்சி கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கை மற்றும் மாணவ மாணவிகளின் நலன் கருதி 10 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்-கும்பகோணம் மண்டலம், கும்பகோணம் புறநகர் கிளை தடம் எண்.201M மூலம் கும்பகோணத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு நடையெடுத்து துக்காச்சிக்கும், தொடர்ந்து துக்காச்சியில் இருந்து காலை 8 மணிக்கு நடையெடுத்து கும்பகோணத்திற்கும் என 2 நடைகளும், கும்பகோணம் நகர்-2 கிளை தடம் எண்.494 மூலம் கும்பகோணத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு நடையெடுத்து துக்காச்சிக்கும், தொடர்ந்து துக்காச்சியில் மாலை 5.25 மணிக்கு நடையெடுத்து கும்பகோணத்திற்கும் என 2 நடைகளுமாக தினசரி 4 நடைகள் இயக்கப்படுகின்றன.
இந்த புதிய வழித்தட பேருந்து வசதியினை துக்காச்சி பேருந்து நிறுத்தத்தில் இருந்து தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கோ.வி.செழியன் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேருந்து துக்காச்சி, திருப்பந்துறை, நாச்சியார் கோவில் வழியாக கும்பகோணம் சென்றடைந்து திரும்பும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கூகூர் அம்பிகாபதி, ஒன்றிய குழு உறுப்பினர் கலைச்செல்வி ராஜேந்திரன், ஊராட்சி செயலர் ராமச்சந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் துணை அமைப்பாளர் செல்வகுமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மணிவண்ணன், கிளை செயலாளர்கள் ஜெகபர் அலி, நாகராஜ், பாஸ்டின், பரணி, திமுக நிர்வாகி போஸ்ட் மேன் ரமேஷ், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்-கும்பகோணம் மண்டலம் மேலாண் இயக்குனர் மகேந்திரகுமார், பொது மேலாளர் ராஜசேகர், துணை மேலாளர் (வணிகம்) செந்தில்குமார், கிளை மேலாளர் சுரேஷ், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள், தொழிற்நுட்ப பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
The post திருவிடைமருதூர் அருகே துக்காச்சியில் புதிய வழித்தடம் அரசு தலைமை கொறடா துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.