திருப்பூர், ஆக. 1: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த 23,500 மாணவர்கள் அணைவரும் 100 சதவீதம் உயர்கல்விக்கு செல்ல வேண்டும். என்ற நோக்கத்தில் அரசின் சார்பில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதனால், மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டரங்கில் செயல்படவுள்ளது.
உயர்கல்வி வழிகாட்டுதல் மையத்தினை அணுகி தாங்கள் விரும்பும் தனியார் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்து உடனடியாக உயர்கல்வியில் சேர்ந்து பயன்பெறலாம்.மேலும், 12ம் வகுப்பு துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் 12ம் வகுப்பு முடித்து இதுவரை தனியார் கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத, தனியார் கல்லூரிக்கு விண்ணப்பித்து சேர்க்கையடையாத மாணவ, மாணவியர்களுக்கு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ மற்றும் நர்சிங் கல்லூரிகள் ஆகிய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற உயர்கல்வி வழிகாட்டுதல் உதவி மையத்தினை உடனடியாக அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு உயர்கல்வி ஆலோசனை முகாம் appeared first on Dinakaran.