கோவை, ஆக. 1: கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் மீட்பு பணிக்காக, கோவை மாநகராட்சி பகுதியில் இருந்து ஹிட்டாச்சி மீட்பு வாகனம் மற்றும் சடலங்களை துர்நாற்றமின்றி பாதுகாக்கும் ப்ரீசர் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்களை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று முன்தினம் நள்ளிரவில் அனுப்பிவைத்தார். கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் இருந்து இவை, துணை மேயர் வெற்றிசெல்வன் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது.
அப்போது, தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, மாநகராட்சி துணை கமிஷனர் சிவக்குமார், மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், உதவி கமிஷனர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் எழில், உதவி பொறியாளர் சபரிராஜ், கவுன்சிலர்கள் பாபு, அஸ்லாம் பாஷா, இளஞ்சேகரன், ராஜலட்சுமி மற்றும் பலர் உடனிருந்தனர்.
மாநகராட்சி கமிஷனர் அனுப்பிவைத்தார்
The post கேரளா மாநிலம் வயநாடு பகுதிக்கு கோவையில் இருந்து மீட்பு வாகனம், ப்ரீசர் பாக்ஸ் appeared first on Dinakaran.