×

வாகன ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

 

கோவை, செப். 4: கோவை ஆட்டோ தொழிலாளர் சங்கம், கோவை டூரிஸ்ட், டாக்சி, வேன், டெம்போ, தொழிலாளர் சங்கம் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில அளவில் ஆட்டோ செயலியை உருவாக்க வேண்டும். ஓட்டுனர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இ.எஸ்ஐ. திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் மாவட்ட பொதுச் செயலாளர் வெங்கடாசலம், ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தலைவர் வேலுசாமி, துணை தலைவர் பெத்தண்ணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post வாகன ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore Auto Workers' Union ,Coimbatore Tourist, ,Taxi, ,Van ,Tempo ,Laborers' Union ,MLA ,Dinakaran ,
× RELATED ஆகாய தாமரையால் மூடி கிடக்கும் முத்தண்ண குளம்