- வெற்றி தினம்
- கார்கில் போர்
- புளியங்குடி வியாசா கல்லூரி
- புளியங்குடி, ஆக
- கார்கில் போர் வெற்றி நாள்
- வியாசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- Subramaniyapuram
- புளியங்குடி
- கல்லூரி ஷெர்மன் பைத்தூர்
- பாண்டியன்
- Iswaran
- போர் வெற்றி நாள்
- தின மலர்
புளியங்குடி, ஆக. 1: புளியங்குடி அருகே சுப்பிரமணியபுரத்தில் உள்ள வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் கார்கில் போர் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி சேர்மன் வெள்ளைத்துரைப் பாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். நிர்வாக அதிகாரி காளித்துரை கார்கில் போர் குறித்து பேசினார்.தமிழ்த்துறை 2ம் ஆண்டு மாணவி அம்மணி தொகுத்து வழங்கினார். மாணவி மகேஷ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முன்னாள் ராணுவவீரர்கள் தோப்பையா பாண்டியன், ராமசாமி ஆகியோர் கார்கில் போரில் தங்களது அனுபவங்களை மாணவிகளுடன் பகிர்ந்து கொண்டனர். கல்லூரி சேர்மன் வெள்ளத்துரைப் பாண்டியன் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரப்படுத்தினார். துணை முதல்வர் சாரதா, தமிழ்த்துறை தலைவி முத்துலட்சுமி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆவுடையம்மாள், பேராசிரியைகள், என்எஸ்எஸ் மாணவிகள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். மாணவி ஐஸ்வர்யா நன்றி தெரிவித்தார்.
The post புளியங்குடி வியாசா கல்லூரியில் கார்கில் போர் வெற்றி தினம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.