×
Saravana Stores

கூடுதல் இயக்குநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விருதுநகர், ஆக.1: விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருத்துவ பணிகள் துணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சந்திரசேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், தொழுநோய் கூடுதல் இயக்குநர் தேவையற்ற அறிக்கைகள் கேட்பது, அறிக்கைகள் வழங்க கால அவகாசம் வழங்காமல் உடனடியாக அறிக்கைகள் கோருதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன், மாநில துணைத்தலைவர் கண்ணன் , மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்னுச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

The post கூடுதல் இயக்குநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,District Secretary ,Public Health Officers Association ,Chandrasekhar ,Virudhunagar Government Hospital ,Dinakaran ,
× RELATED சிவகாசியில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்