×

உத்திரமேரூர் அருகே விவசாய நிலத்தில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு


சென்னை: சாலவாக்கம் பகுதியில் பழுது காரணமாக இந்திய விமானப்படை பயிற்சி ஹெலிகாப்டர் தரையிறக்கம் செய்யப்பட்டதால், பெரும் பரபரப்பு நிலவியது. இந்திய விமானப்படை பயிற்சி ஹெலிகாப்டர் ZA-1844 நேற்று காலை பயிற்சியாளர்கள் அனிரூத் குரூவர் மற்றும் மேஜர் சுராஜ் பாட்டியால் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஹெலிகாப்டரில் சிறு பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் உத்திரமேரூர் அருகே சாலவாக்கம் ஆலப்பாக்கம் கிராம சாலையில் உள்ள சாய்பாபா கோவில் அருகே காலியாக உள்ள விவசாய நிலத்தில் பத்திரமாக ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது.

இதையடுத்து வேறு ஹெலிகாப்டரில் மெக்கானிக்குகள் வரவழைக்கப்பட்டு, பழுதான ஹெலிகாப்டர் பழுது சரி செய்யப்பட்டு, 2 ஹெலிகாப்டர்களும் ஒன்றன் பின் ஒன்றாக மீண்டும் இயக்கப்பட்டது. ஹெலிகாப்டர் தரையிறங்கியதால் அங்கு கிராம மக்கள் கூடவே, அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்தில் சாலவாக்கம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

The post உத்திரமேரூர் அருகே விவசாய நிலத்தில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Uttaramur ,Chennai ,Indian Air Force ,SURAJ PATIAL ,Uthramaroor ,Uttaramore ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்திய...