×

குழந்தை கண் முன் விளையாட்டாக தூக்கில் தொங்கிய டிரைவர் உயிரிழப்பு

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ்(35), லாரி டிரைவர். மனைவி மற்றும் 1ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளனர். மனைவி தாய்வீட்டிற்கு சென்றிருந்தபோது, மகனிடம், ‘நான் சாகப் போறேன் டா’ அதை வீடியோ எடுக்கலாம் என செல்போனை ஆன் செய்து வைத்து விட்டு படுக்கை அறையில் இருந்த மின் விசிறியில் புடவையில் ஜெகதீஷ் கழுத்திற்கு சுருக்கு போட்டுள்ளார். சில நொடியிலேயே அவரது உயிர் பிரிந்தது. தந்தை நடிக்கிறார் என அப்பாவியாக பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் பின்னர் காப்பாற்ற முயற்சிக்கிறான். இந்த வீடியோ அவரது செல்போனில் பதிவாகி இருந்தது.

The post குழந்தை கண் முன் விளையாட்டாக தூக்கில் தொங்கிய டிரைவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Sengam ,Jagadish ,Melsengam ,Tiruvannamalai district ,
× RELATED 2025ம் ஆண்டு முதல் கணினி முறையில் க்யூட் யூஜி தேர்வு