×

மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் கறாரான வசூலை தடுக்க வேண்டும்: மாதர் சங்கத்தினர் கோரிக்கை

சென்னை: சென்னையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நுண்நிதி நிறுவனங்கள் அடாவடியாக கடன் வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். ஊரடங்கு காலத்தில் கட்ட வேண்டிய கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். முழுமையான வேலை வாய்ப்பு, வருமானம் கிடைக்கும் வரை கடனை திருப்பி அளிப்பதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும். பெண்கள் தொழில் துவங்குவதற்கு வங்கிகள் மூலம் நிதி உதவி வழங்க வேண்டும். தனித்து வாழும் பெண்களுக்கு புதிய தொழில் தொடங்குவதற்கு குறைந்த வட்டிக்கு கடன் பெற முன்னுரிமை வழங்க வேண்டும். நுண்நிதி நிறுவனங்களின் செயல்பாட்டை கண்காணிப்பதற்கு தனி அதிகாரிகளை மாவட்டம்தோறும் நியமிக்க வேண்டும். கட்டாய வசூல் செய்து பெண்களை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கி தற்கொலைக்குத் தள்ளும் நுண்நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் கறாரான வசூலை தடுக்க வேண்டும்: மாதர் சங்கத்தினர் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mathar Sangels' ,Chennai ,All Indian Democratic Maadar Union ,Minister ,Mathar ,Dinakaran ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...