வேலூர், ஜூலை 31: வேலூரில் நேற்று 100 டிகிரி வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டு கோடைக்காலத்தில் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானதால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். மேலும் கோடைமழையால், வெயிலின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்கள் சற்றே நிம்மதியடைந்தனர். ஆனால் அவ்வப்போது 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வந்தது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக 100 டிகிரிக்கும் குறைவாக வெயில் பதிவாகி வந்தது.
இதற்கிடையில், நேற்று காலை 9 மணி முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து 100 டிகிரி வெயில் பதிவானது. திடீரென அதிகரித்த வெயிலால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஜூலை மாதத்தில் கடந்த 10ம் தேதி 102.2 டிகிரியும், 12ம் தேதி 102.7 டிகிரியும், நேற்று 100 டிகிரி என 3 முறை 100 டிகிரிக்கு வெயில் பதிவாகியுள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post வேலூரில் 100 டிகிரி வெயில் பதிவு appeared first on Dinakaran.