- இறைவன்
- காலபைரவா
- தேய்பிரா அஷ்டமி
- தெப்பிராய் அஷ்டமி
- சிரன்னையநல்லூர்
- நாகப்பட்டினம் மாவட்டம் வேதராணியம்
- நல்லூர் மேலயக்காடர் கோயில்
- காலபைரவா
- கலாபைரவரா
- தின மலர்
வேதாரண்யம், ஜூலை 30: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மறைஞாயநல்லூர் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மறைஞாய நல்லூர் மேலமறைக்காடர் கோயிலில் கால பைரவர் சன்னதி உள்ளது. இந்த கோயிலில் அமைந்துள்ள காலபைரவருக்கு ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து யாக பூஜை நடந்தது. பைரவருக்கு பல்வேறு திரவியங்கள், பால், இளநீர், தயிர், பஞ்சாமிர்தம், தேன், விபூதி போன்றவற்றால் அபிஷேகம் நடந்தது. பின்னர் புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமி சங்கு புஷ்பம் மற்றும் செவ்வரளி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
The post தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மறைஞாயநல்லூர் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.