- ஆடிபுரம் திருவிழா
- பெரியநாயகி அம்பாள் கோவில்
- திருவரங்குளம்
- புதுக்கோட்டை
- பெரிய நாயகி அம்பாள் கோவில்
- திருவரங்குளம், புதுக்கோட்டை மாவட்டம்
- சிவாச்சாரியர்கள்
- அம்பாள்
- திருவரங்குளம் பெரியநாயகி அம்பாள் கோவில் ஆடிப்பூரம் திருவிழா
புதுக்கோட்டை, ஜூலை 30: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற பெரிய நாயகி அம்பாள் கோயிலில் ஆடிப்பூரம் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக அம்பாள் சன்னதியில் உள்ள 31 அடி உயரமுள்ள கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கு ஐதீக முறைப்படி காமதேனு படம் வரைந்த கொடியேற்றப்பட்டது. உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது ஆகஸ்ட் 6ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை ஆடிப்பூரம் தேரோட்டம் நடைபெற உள்ளது.
The post திருவரங்குளம் பெரியநாயகி அம்பாள் கோயிலில் ஆடிப்பூரம் திருவிழா appeared first on Dinakaran.