×
Saravana Stores

முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு: கலெக்டர் அறிவிப்பு

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான உடனடி மாணவர் சேர்க்கை, நாளை (31ம் தேதி) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி மற்றும் 10 வகுப்பு தேர்ச்சி பட்டய படிப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி இவைகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.8.2024 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பயிற்சிக்கான தேர்வுகள் தமிழில் மட்டுமே எழுத வேண்டும்.

இப்பயிற்சிக்கு www.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு நாளை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான பயிற்சி வகுப்புகள் பிராட்வே, தேனாம்பேட்டை மற்றும் செங்குன்றம் ஆகிய பயிற்சி நிலையங்களில் நடைபெறும். ஏற்கெனவே இப்பயிற்சிக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் பயிற்சி நிலையத்தில் நேரடியாக தங்களது அசல் சான்றிதழ்களை சரிபார்த்த பின் சேர்க்கையினை உறுதி செய்து கொள்ள வேண்டும். இப்பயிற்சிக்கான கட்டணம் 18,750 ரூபாயை ஒரே தவணையில் செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு: கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Collector ,Rashmi Siddharth Jagade ,Dinakaran ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் சான்று பெற 15ம்...