×

5 ஆயிரம் லிட்டர் கொள்ளவுடன், ரூ.3.50 கோடி மதிப்பில் காக்களூர் பால் பண்ணையில் தயிர் உற்பத்தி ஆலை

* காணொளி காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார், பூந்தமல்லி எம்எல்ஏ பயன்பாட்டுக்கு இயக்கி வைத்தார்

திருவள்ளூர்: காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமானது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த 3 மாவட்டங்களில் இருந்து ஒன்றியமானது 545 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்து 500 மில்லி லிட்டர் பாக்கெட்டுகளாக எஸ்எம்., டிஎம், எப்சிஎம் என பால் பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு 87 ஆயிரம் லிட்டர் பால் மொத்த விற்பனை முகவர் மற்றும் முகவர்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஒன்றியங்களை வளப்படுத்தவும், நிதி நிலைமையை மேம்படுத்தவும் மக்களுக்கு தரமான பால் மற்றும் பால் உப பொருட்கள் வழங்கவும் பல்வேறு புதிய திட்டப் பணிகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி ஒன்றியத்தின் நிதியினை கொண்டு 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட நவீன தயிர் உற்பத்தி ஆலை ரூ.3.50 கோடி செலவில் காக்களூர் பால்பண்ணையில் அமைக்கப்பட்டது.

இதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சென்னையிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதில் கூடுதல் தலைமைச் செயலாளர் கோபால், நிர்வாக இயக்குனர் வினீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இதனைத் தொடர்ந்து காக்களூர் பால் பண்ணையில் பயன்பாட்டிற்கு ஆலையை தொடங்கி வைக்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பொது மேலாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.

ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.ஜெயசீலன், ஆவின் துணை பதிவாளர் சித்ரா, உதவி பொது மேலாளர்கள் பானுமதி, நாகராஜ், வெங்கடெஸ்வரலு, சந்திப், டெய்ரி மார்க்கெட்டிங் அலுவலர் ஜெய்விக்னேஷ், இன்ஜினியர் அகிலேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் த.எத்திராஜ், டி.கே.பூவண்ணன், ஆவின் மேலாளர் தமிழ்ச்செல்வி, விக்னேஷ் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பயன்பாட்டிற்கு ஆலையை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் திமுக நிர்வாகிகள் டி.எம்.ராமச்சந்திரன், கே.கே.சொக்கலிங்கம், டி.தரணி, சாமுண்டீஸ்வரி சண்முகம், எஸ்.சௌந்தர்ராஜன், வி.தியாகராஜன், சுரேந்திரன், கே.சரவணன், ஜெய்சங்கர், ஸ்ரீதர், திராவிடதேவன், தியாகராஜன், அருண்கீதன், டி.சதீஷ், கோவிந்தராஜன், ஜாகிர், இயேசுபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post 5 ஆயிரம் லிட்டர் கொள்ளவுடன், ரூ.3.50 கோடி மதிப்பில் காக்களூர் பால் பண்ணையில் தயிர் உற்பத்தி ஆலை appeared first on Dinakaran.

Tags : Kakalore Dairy Farm ,Chief Minister ,Poontamalli ,MLA ,Tiruvallur ,Kanchipuram, Tiruvallur District Cooperative Milk Producers Union ,Kanchipuram ,Chengalpattu ,Kakalore ,dairy ,
× RELATED முதல்வர் வெளிநாடுகளுக்கு சென்று...